அமெரிக்காவின் லாஸ்-ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டிகளும் விளையாடப்படவுள்ளன. டி20 ஃபார்மேட்டில் நடைபெறவிருக்கும் இப்போட்டிகளில், 6 அணிகள் பங்கேற்கும் என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. எந்த 6 அணிகள் விளையாடவுள்ளன, எங்கு போட்டிகள் நடைபெறவுள்ளன போன்றவை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.