பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் மெல் நோவாக் (93) வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர், புரூஸ் லீயுடன் ‘Game of Death’ , ‘Eye for an eye’, ‘Black Belt Jones’ படங்களிலும் வில்லனாக நடித்து மிரட்டி இருக்கிறார். இவரின் மறைவு செய்தியை அவரது மகள் உறுதிப்படுத்தியுள்ளார். திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.