அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘குட், பேட், அக்லி’ திரைப்படம் இன்று காலை தமிழகத்தில் ரிலீசாகியுள்ளது. அஜித்துக்கு ‘விடாமுயற்சி’ படத் தோல்விக்குப் பின் இப்படம் வெளியாவதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயரே ‘ரெட் டிராகன்’ என்று இருப்பதால், மாஸ் சீன்கள் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.