சென்னை ஏப், 3
தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சனிக்கிழமையான அன்று, காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயற்பொறியாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் குறித்து புகார் அளிக்கலாம், அல்லது சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ளலாம்.