சென்னை ஏப், 1
கோடை வெயில் வழக்கத்தை விடவும் உக்கிரமாகத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், ஜூன் வரை வட தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து, வெப்ப அலை வீசக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. இந்த வெப்ப அலைகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள், வயதானவர்கள், நோய்வாய்பட்டவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.