துபாய் மார்ச், 18
ஐக்கிய அரபு அமீரக துபாயில் வசிக்கும் தமிழ்நாடு இராஜகிரி ஊரை சேர்ந்தவர்களால் அமீரகத்தில் செய்லபடும் ராஜகிரி சமூக நல பேரவை என்ற அமைப்பின் சார்பில் 20ம் ஆண்டு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மற்றும் ராஜகிரி உறவுகளின் சங்கமம் துபாயில் உள்ள ஹயாத் பேலஸ் ஹோட்டலில் ரீம் முகம்மது ரபீக் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் நிர்வாகி முஹம்மது ஹாமீத் உட்பட பேரவை தலைவர் வி.ஏ.முகம்மது சித்திக், துணைத் தலைவர் எம்.ஏ.ஜாபர் சாதிக், செயலாளர் எம்.அகமது ரத்வான், துணைச் செயலாளர் எஸ்.முகம்மது அமீன், பொருளாளர் ஏ.முகம்மது மாலிக் மற்றும் ராஜகிரி சேர்ந்த சகோதரர் சகோதரரிகள் உள்ளிட்ட நலப்பேரவை உறுப்பினர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் உட்பட இஃப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.