துபாய் மார்ச், 19
ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாயில் தமிழ் நாடு அரசு புலம்பெயர் தமிழர் நலவாரியம் உறுப்பினரும் ஐக்கிய அரபு அமீரக திமுக அமைப்பாளருமான SS மீரான் தலைமையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா மற்றும் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ள துபாயில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக பவர் குரூப் நிறுவனத்தின் நிறுவனர் ஜாஹீர் ஹுசைன், ராயல் டைமன்ட் குரூப் ஒருங்கிணைப்பாளர் தாஹா ஆகியோரும் மேலும் விருந்தினார்களாக கல்வி கற்றல் மையம் நிறுவனர் முனைவர் ரோகினி, எழுத்தாளர் ஜெசிலா பானு, அமீரக பெண்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் சானியோ, ராயல் பிரியாணி நிறுவனர் சம்சுதீன், TEPA பால் பிரபாகர், முபாரக், கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, கலாட்டா குடும்பம் நிறுவனர் கோமதி மற்றும் ரவி மேலும் அமீரகத்தில் வசிக்கும் தமிழக தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், சமூக ஊடக பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியாளர்கள், அமீரக திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் குடும்பத்தோடு பல்வேறு அமீரகங்களில் இருந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நூறாண்டுகள் நோநொடியில்லாமல் வாழவேண்டும் என்று பிரார்த்தனையோடு கேக்குவெட்டி கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர் நலவாரியம் உறுப்பினரும் ஐக்கிய அரபு அமீரக திமுக அமைப்பாளருமான SS மீரான் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக புலம்பெயர் தமிழர் நலவாரியம் உறுப்பினர் SS மீரான் வந்திருந்த அனைவருக்கும் உணவு உபசரித்து நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.