துபாய் மார்ச், 12
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த (KEO) என்ற கூத்தாநல்லூர் அமீரக அமைப்பு சார்பாக இஃப்த்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாயில் சிறப்பாக நடைபெற்றது.
நோன்பு திறப்பு நிகழ்ச்சி கூத்தாநல்லூர் அமீரக அமைப்பின் தலைவர் ஹக் மற்றும் செயலாளர் நாசர் தலைமையில் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்வில் அமீரகத்தில் வசிக்கும் கூத்தாநல்லூர் ஜமாத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உட்பட பெண்கள் உள்ளிட்டோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாட்டில் இருந்து கூத்தாநல்லூர் ஜமாத் தலைவர், கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நிருபர் கமால் கேவிஎல், தினகுரல் தேசிய தமிழ் நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் முதன்மை நிருபரும் துபாய் ஈமான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான நஜீம் மரிக்கா, துபாய் மைந்தன் இன்ஸ்டா தஞ்சை நசீர் மற்றும் ஜாபர், சமூக சேவை ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.