துபாய் மார்ச், 11
ஐக்கிய அரபு அமீரக துபாயில் WIT Where In Tamilnadu பெண்கள் அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு “இறைவி-2” விருதுகள் விழா என ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவைக்கும் விழா மற்றும் இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் துபாயில் உள்ள கிரௌன் பிளாசா ஸ்டார் ஹோட்டலில் WIT பெண்கள் அமைப்பின் தலைவி மெர்லின் தலைமையில் அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில் சன் டிவி மற்றும் சன் மியூசிக் புகழ் தொகுப்பாளினி VJ அஞ்சனா தொகுத்து வழங்க மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான அமீரகத்தைச் சேர்ந்த Ferticlinic பௌச்சாரா ஈசபல், மற்றும் டாக்டர் சல்மா கான் ஆகியோரும் மேலும் ஊடகவியல் சார்பாக கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் வளைகுடா முதன்மை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.