சென்னை செப், 2
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் எம்ஜிஆர் மாளிகையில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.bஉதவி ஆணையர் தலைமையில் 80 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுக்குழு செல்லாது என அறிவித்ததோடு ஜூன் 23க்கு முந்தைய நிலையே தொடரும் என தீர்ப்பளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். அதன் இறுதி விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்போடு இனி இணைந்து செயல்பட முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கின்றனர். இத்தீர்ப்பை முன்னிட்டு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.