சென்னை மார்ச், 18
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதவி காலத்தில் ஆவின் நிறுவனத்தில் மூன்று கோடி வரை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 400 பக்க ஆவணங்களை மொழி பெயர்த்து தருமாறு ஆளுநர் கேட்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து ஆளுநர் கேட்ட ஆவணங்களை இரண்டு வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.