சென்னை பிப், 23
இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஒருநாள் போட்டியை கிரிக்கெட் போட்டியை சென்னை மக்கள் காண விஷேச ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன் மாலையில் மெரினாவுக்கு சென்று விட்டால் போதும் லைவ்வாக மேட்சை கண்டு களிக்கலாம். இதற்காக மெரினாவில் விவேகானந்தர் இல்லம் எதிரிலும், பெசன்ட் நகரில் காவல்துறை பூத் அருகிலும் பிரம்மாண்டத்திரை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மெரினா செல்பவர்கள் இதனை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.