கீழக்கரை பிப், 12
கடந்த மாதம் கீழக்கரையின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி நகர் SDPI கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தை நேரில் சந்தித்து ஐந்து அம்ச கோரிக்கை அடங்கிய மனு அளித்தனர்.
உடனடியாக அனைத்தையும் சரி செய்வதாக எம்.எல்.ஏவும் வாக்குறுதி அளித்திருந்தார்.இதில் கீழக்கரை DSP சாலை சீரமைப்பு மற்றும் கீழக்கரை முதல் இராமநாதபுரம் வரையிலான நெடுஞ்சாலையை பேட்ஜ் ஒர்க் மூலம் சரி செய்தது என SDPI கட்சியின் இரண்டு கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மீதமுள்ள மூன்று கோரிக்கைகள் குறித்த என்னாச்சு?என்னாச்சு??வாக்குறுதி என்னாச்சு?? என்ற போஸ்டர் கீழக்கரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
இதில் மக்களை அதிகம் அச்சுறுத்தி வரும் நாய்கள் குறித்த ABC சென்டர் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை தெருக்களில் கூட்டம் கூட்டமாய் திரியும் நாய்களின் புகைப்படங்களே சாட்சி.
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கிற்கு சட்டமன்ற உறுப்பினரும் காரணம் என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கு எம்.எல்.ஏ என்ன பதில் சொல்ல போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்?
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்