துபாய் ஜன, 14
ஐக்கிய அரபு அமீரக துபாய் காராமா பகுதியில் துபாய் பிரேம்க்கு எதிரே உள்ள லூலூ ஹைபர்மார்கட்டில் லூலூ நிறுவனம் சார்பாக தமிழர்களின் திருநாளான பொங்கல் விழா கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் இணை ஆசிரியருமான முஹம்மது நஜீம் மரிக்கா சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியினை நடத்தினார். மேலும் லூலூ கராமா ஹைபர்மார்கட் சார்பாக வாடிக்கையாளர்களுக்கும் உலக தமிழகர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை கூறி பொங்கல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு லூலூ நிர்வாகம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கராமா லூலூ ஹைபர்மார்கட் பொதுமேலாளர் நிசாமுதீன் ஷாஹுல் ஹமீத், உணவு பிரிவு மேலாளர் ஆதம் மன்சூர், அலுவலக உதவி மேலாளர் சனல் மோகன் மற்றும் ஹைப்பர்மார்கட் அணைத்து மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உலக தமிழர்கள் அனைவருக்கும் மற்றும் லூலூ வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்களை கூறினார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.