கீழக்கரை டிச, 10
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலைத்தெருவில் செயல்படும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) யின் சமூக, மருத்துவ, கல்வி சேவை, வட்டியில்லா கடன் பேரிடர் காலத்து உதவிகள், மரக்கன்று நடுதல் போன்ற சேவைகளை பாராட்டி 2024 ஆண்டிற்கான தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது வழங்கி கௌராவிக்கப்பட்டது.
இவ்விருது தமிழக குரல் நியூஸ் தொலைக்காட்சி மற்றும் செய்திகள் இணையதளம் சார்பாக தன்னலம் பாராமல் சேவை செய்யும் அறக்கட்டளைகளை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அந்த வகையில் கீழக்கரை செயல்படும் ஜகாத் கமிட்டியின் செயல்பாடுகளை ஆய்வுசெய்து அதன் சேவைகளை பராட்டி இவ்விருது கோயம்புத்தூரில் உள்ள தானிஷ் அகமது தொழில் நுட்ப கல்லூரியில் வழங்கி கௌராவிக்கப்பட்டது.
இவ்விருதிணை ஜகாத் கமிட்டியின் சார்பாக அதன் உறுப்பினர்கள் பாகிருதீன் இஸ்மாயில் மற்றும் பைசல் ஆகியோர்கள் பெற்றனர்.
இவ்விருதினை பெற்ற 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நலஅறக்கட்டளையின் நிர்வாகிகளுக்கு பல்வேறு சமூக அமைப்பினர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.