அமெரிக்கா டிச, 9
சிரியா, அமெரிக்கா நட்பு நாடு இல்லை என்பதால் அமெரிக்க அரசு தலையிடக்கூடாது என அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் கூறியுள்ளார். சிரியாவில் கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்துவரும் நிலையில் ஹெச்டிஎஸ் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கசில் நுழைந்துள்ளனர். அச்சத்தில் நாட்டை விட்டு வெளியேறிய அந்நாட்டு அதிபர் பஷர் அல் ஆசாத் பயணித்த விமானம், ரேடார் சிக்னலில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.