Spread the love

துபாய் நவ, 28

ஐக்கிய அரபு அமீரக துபாயில் பிரபல திரையறங்கான ஹயாத் ரெஜான்சி கெலரியா திரையறங்கில் A JFB தயாரிப்பில், இளம் இயக்குனர் ஆண்ட்ரியா கதை, இயக்கம் மற்றும் நடிப்பில், உருவான பெண்களுக்கான உணர்வை விழிப்புணர்வு மையமாக கொண்ட “விசை” என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

இப்படம் பரணிதர் ஒளிப்பதிவில், அஸ்வத் இசையில், ஜேன் லூயிஸ் படத்தொகுப்பில் நடிகர்கள் ஸ்ரீராம் க்ரிஷ், காயத்ரி உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தை வெளியீடுவதற்கு மதுரை உணவகம் நிறுவனர் பாலமுருகன், சாமியுக்த பவன் நிறுவனர் ராமமூர்த்தி, RSM ஆட்டோ கேரேஜ் நிறுவனர் ரமேஷ் ஆகியோர் பேராதரவில் கேப்டன் டிவி, தினகுரல் நாளிதழ், சதர்ன் மெயில் ஆங்கில நாளிதழ், வணக்கம் பாரதம் வாரஇதழ், எல்லா தமிழ், மீடியா 7 உள்ளிட்டோர் ஊடக ஆதரவாலர்களாக உறுதுணையாக இருந்தனர்.

இப்படத்தைக் காண , கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், போர்ச்சுன் பைவ் ராமகிருஷ்ணன், துபாய் தர்பார் நிறுவனர் கபீர், யூடூப் தஞ்சை நசீர், தினகுரல் நாளிதழ் தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, A2B ராஜு மந்திரி, HOPE சமூக அமைப்பின் நிறுவனர் கௌசர், மீடியா7 நியூஸ் ஆஸ்கர், இராணி திரைப்பட இயக்குனர் ஜெகன், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினார்களாகவும் மேலும் குடுப்பத்தினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

“விசை” குறும்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாகவும் இந்த குறும்படத்தின் மூலம் ஒரு சிறந்த இயக்குனராக ஆண்ட்ரியா பெர்னாண்டஸ் பௌட் தன்னை பதிவுசெய்துள்ளார் என்று தங்களுடைய நேர்மறையான கருத்துக்களை பதிவுசெய்து படத்தின் இயக்குனர் மற்றும் படத்தில் சிறப்பாக நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *