கீழக்கரை அக், 16
நமது KLK நலன் விரும்பும் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தது
கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் ஊர்தோறும் குடிநீர் வழங்கும் முயற்சியில் ஒரு பகுதியாக ஒவ்வொரு வார்டிலும் ஒரு குடிநீர் தொட்டி அமைத்து தினமும் இலவச குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக 4 வது வார்டு கவுன்சிலர் திருமதி சூர்யகலா வேண்டுகோளுக்கிணங்க மறவர் தெரு துவக்கப்பள்ளி அருகில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி துவங்கியது.
கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டிகளில் ஒருவரான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா,நகர்மன்ற உறுப்பினர் சூர்யகலா,நமது KLK நலன் விரும்பும் சங்கத்தின் செயலாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி,கீழக்கரை வெள்ளை மாளிகை எஸ்டேட் நிர்வாகி சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கென்னடி,கம்யூனிஸ்ட் கட்சி நகர் செயலாளர் மகாலிங்கம் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
அடுத்து ஏழாவது வார்டு கவுன்சிலர் மீரான் அலி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் குறிப்பிட்டுள்ள இடத்தில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுக்கப்படும் என கீழக்கரை வெள்ளைமாளிகை எஸ்டேட் நிர்வாகி சித்திக் தெரிவித்துள்ளார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்