கீழக்கரை செப், 18
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெரு பழைய வைக்கோல்பேட்டை அருகில் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நிதியில் இருந்து அமைக்கப்பட்ட சோலார் மின்கம்பம் திடீரென மாயமான செய்தியறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதமாகி வந்த நிலையில் 7 வது வார்டு கவுன்சிலர் மீரான் அலி கடந்த 18 மாதங்களாக எரியாமல் இருந்த லைட் என்பதால் அதை சரி செய்வதற்காக மின்கம்பத்தோடு எடுத்து செல்லப்பட்டதாக வாட்சப் தளத்தில் கூறினார்.
லைட் எரியவில்லை என்றால் லைட் செட்டை மட்டும் தானே கழற்றுவார்கள்,அது என்ன புதுசா மின்கம்பத்தையே அப்புறப்படுத்தியுள்ளனர்? என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
அகற்றிய இடத்திலேயே மீண்டும் மின்கம்பம் அமைக்க வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்