Spread the love

கீழக்கரை ஆக, 30

கீழக்கரை ஜின்னா தெரு செய்யதுல் ஹசனாத் பள்ளி வளாகத்தில் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் கௌரவ ஆலோசகருமான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமையிலும் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE.உமர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.

கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா,துணை தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்,பழைய குத்பா பள்ளி ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டதில் கீழக்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஏற்கனவே கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான நிலம் வாங்குவது, குறித்த விசயத்தில் அது கால தாமதாவதால் அதற்கு பதிலாக கூடுதல் பம்பிங் ஸ்டேஷன் அமைத்து கழிவு நீர் வெளியேற்றும் முயற்சியை முன்னெடுப்பது என ஆலோசிக்கப்பட்டது.

கழிவு நீர் சுத்திகரிப்பு மைய திட்டம் கால தாமதாகும் என்பதால் அதற்காக கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் 50 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டதற்கு பதிலாக தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் பத்து லட்சமும் அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

கண்ணாடி வாப்பா அறக்கட்டளையின் தொகையை ஒவ்வொரு திட்டப்பணி நிறைவுறும் போது அவ்வப்போது தேவைக்குரிய தொகையை காசோலை மூலம் வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கூட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் நமது KLK வெல்ஃபேர் கமிட்டி செயலாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்பாக செய்திருந்தார்.

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *