கீழக்கரை ஆக, 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அஹமது தெருவில் அமைந்திருக்கும் முகைதீன் தைக்கா கட்டிடம் அஹ்மது தெரு பொதுநல சங்கம்(ASWAN) என்ற அமைப்பின் கீழ் கடந்த 1932ம் வருடம் முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் மூலம் சிறார்களுக்கு கல்வி, ஒழுக்கம் உள்ளிட்ட வாழ்வியல் நெறிமுறைகள் கற்று கொடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு சமூக நல பணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
பழமையான கட்டிடத்தின் அமைப்பு மாறாமல் அதனை புதுப்பித்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டி அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர்,மக்கள் சேவை அறக்கட்டளை தலைவர் MKE.உமர் அப்துல் காதர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் சங்கத்தின் தலைவர் ஏ.சுல்தான்,செயலாளர் நெய்னா முகம்மது,AS. கஃபார்கான் உள்ளிட்ட நிர்வாகிகள், தெருமக்கள் இந்நிகழ்வின் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்