சென்னை ஆக, 24
1000 பெண்கள் திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் வழங்கும் அரசாணையை தமிழக அரசு அடுத்த வாரம் வெளியிட உள்ளது. சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை கடந்த 2022 ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி கடந்த 2023ல் 500 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2024ல் ஆயிரம் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட உள்ளது.