கீழக்கரை ஆக, 17
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தேசிய கொடி கொடியேற்றினார். இந்நிகழ்வில் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மக்தூமியா மேல்நிலைப்பள்ளி,தொடக்கப்பள்ளிகள் இணைந்து நடத்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் அல்ஹாஜ் ஹாஜா ஜலாலுதீன் கொடியேற்றி வைத்து விழா பேருரையாற்றினார். தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்று பேசினார்.
ஜமாத் செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான மூர் நவாஸ்,பொருளாளர் சுல்தான் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள்,தாளாளர் இஃப்திகார், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனரும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான உம்முல் ஜாமியா சிராஜுதீன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் முகம்மது சலீம் கொடியேற்றினார். பள்ளி தலைமையாசிரியர் சையது அபுதாகிர் வரவேற்று பேசினார். பள்ளி தாளாளர் முகம்மது சுஐபு வாழ்த்துரை வழங்கினார்.
இஸ்லாமியா பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பள்ளி தாளாளர் MMK. முகைதீன் இப்றாகீம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். கல்விக்குழு நிர்வாகியும் நகர்மன்ற உறுப்பினருமான MMK. காசிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்.