துபாய் ஜூலை, 27
துபாயில் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த சமூகசேவகி ஜாஸ்மின் அபூபக்கர் அமீரகத்தில் பல்வேறு சமூகசேவைகளை தொடர்ந்து இன்முகத்தோடு செய்து வந்தார். அதேபோல் சுற்றுசூழலில் அதிக ஆர்வம் கொண்டு தனது சமூக அமைப்பின் கீரீன்குளோப் சார்பில் பள்ளி குழந்தைகளின் மூலமாக அமீரக சுகாதரத்துறையோடு இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
மேலும் அமீரகத்தில் உள்ள ரெட் கிரஸண்ட் சமூக அமைப்பில் தன்னார்வலராக சேர்ந்து பல்வேறு சமூக சேவைகளை செய்துவந்தார். கொரோனா போன்ற பேரீடர் காலத்தில் பல்வேறு சமூகசேவைகளை செய்தார் .
அமீரக ஷார்ஜா கலாச்சார மையத்தில் ரெட் கிரஸண்ட் சார்பில் பல்வேறு சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சமூக சேவைக்கான சிறந்த விருதினை தமிழ்நாடு மதுரையைசேர்ந்த ஜாஸ்மின் அபூபக்கருக்கு ரெட் கிரஸண்ட் அமைப்பின் தலைவர் வழங்கி கௌரவித்தார்.
மேலும் இவர் சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.