துபாய் ஜூலை, 11
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகால வெப்பம் தவிர்க்க, அதற்கு தீர்வாக துபாயில் செயல்பட்டுவரும் அன்னபூர்ணா உயர்தர சைவ உணவகம் சார்பில் அன்னபூர்ணா உணவகம் நிறுவனரும் பிஎஸ்எம் குரூப் நிறுவனங்களின் நிறுவனருமான பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் அறிவுறுத்தலின்படி நிர்வாக இயக்குனர் முஹம்மது அலி ஏற்பாட்டில் புத்துணர்ச்சியூட்டும் வகையில் சமூக சேவையாக இலவச நீர் மோர் பந்தல் அமைத்து அனைவருக்கும் தாகம் தீர்த்துவருகிறார்கள்.
இதுபற்றி உணவகத்தின் நிர்வாக இயக்குனர் கூறுகையில்,
“கோடைகால வெப்பம் நாளுக்கு நாள் கடுமையாக இருப்பதால், மேலும் வாடிக்கையாளர்களுக்கும் பாதசாரிகளுக்கும் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் மோர் அளித்துவருகிறோம் ” மேலும் மோர் ஒரு நல்ல ஆரோக்கியமான பானமாகும், இது வியர்வையின் மூலம் இழந்த எலக்ட்ரோலைட்களை நிரப்புவதற்கு ஏற்றது. இது புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல் கோடை வெப்பத்தில் அடிக்கடி ஏற்படும் சோர்வை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. ஆதலால் சுத்தமான முறையில் மோர் தயாரித்து கொடுத்துவருகிறோம்” என்று கூறினார்.
இவரின் இந்த இலவச மோர் பந்தல் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது. மேலும் இது காலை 12 மணி முதல் மாலை 3 மணி வரை தனது உணவகத்திற்குள் நுழைபவர்களுக்கும் அங்கு வரும் பாதசாரிகளுக்கும் இலவச மோர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த மோர்ப்பந்தல் கோடை முழுவதும் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கேப்டன் டிவி மற்றும் தமிழகக்குரல் டிவி வளைகுடா நிருபர் கமால் கேவிஎல், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, ரெஸ்கெர் ஹோம் ஹெல்த் கேர் இயக்குனர் ரம்ஜத் ஷேக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.