சென்னை ஜூலை, 25
சென்னை-பெங்களூர் விரைவு சாலை பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். தற்போது வரை 62 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறிய அவர் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார். இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும்போது சென்னை-பெங்களூர் இடையேயான பயண தூரம் வெகுவாக குறையும் என கூறப்படுகிறது.