சென்னை ஜூலை, 21
தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை முதல் ஜூலை 31 வரை தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் சென்னைக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தியோதயா விரைவு ரயில் சேவை ஒரு வாரம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வைகை, ராக்போர்ட், பல்லவன் ரயில்கள், செங்கல்பட்டு வரை இயக்கப்படும் தாம்பரம்-செங்கோட்டை ரயில்கள் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும்.