சென்னை ஜூலை, 18
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 67 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக, பாஜக, பாமக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன. நீதிபதி குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு முன்பு 36 வது வழக்காக அவை பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.