கீழக்கரை ஜூலை, 15
கீழக்கரையின் பழமையான பழைய குத்பா பள்ளிக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை (12.07.2024) மாலை நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஹாஜா ஜலாலுதீன் தலைமையிலான அணியும் ஷபீர் அலி தலைமையிலான அணியும் போட்டியிட்டன.
வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தேர்தலில் 185 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.இதில் ஒரு வாக்கு செல்லாதவையென்றும் மீதமுள்ள 184 வாக்குகளில் ஷபீர் அலி தலைமையிலான அணி 84 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது.100 வாக்குகள் பெற்ற ஹாஜா ஜலாலுதீன் தலைமையிலான அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தலைவர் ஹாஜி. M.M.ஹாஜா ஜலாலுதீன், துணை தலைவர் M.S. இஸ்ஸதீன், செயலாளர் M.S. ஷர்ஃப்ராஸ் நவாஸ், துணை செயலாளர் M. செய்யது இபுறாஹிம், பொருளாளர் M.S.H. சுல்தான் செய்யது இபுறாஹிம் சாகிபு, துணை பொருளாளர் P.சுல்தானுல் ஆரிபின் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் பொதுக்குழு உறுப்பினர்களாக M.ஹபீப் முகம்மது, S.சீனி மதார் சாகிபு, A.சதக் முகம்மது, A.லெப்பை தம்பி, S. கனிமத்துல்லா, பவுசுல் அமீன், S.ஜகுபர் சாதிக், அலி லாமிரி, K. அகமது கான், S. முகம்மது ஆசிப், S. தாஹா முகைதீன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட வக்ஃபு வாரிய சூப்பிரண்ட் நிஜாம் மற்றும் ஆய்வாளர் மன்சூர் அகமது தேர்தலை நேர்த்தியாக நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனநாயக முறையில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு நமது வணக்கம் பாரதம் இதழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்