சென்னை ஜூலை, 3
தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது. பள்ளி படிப்பை முடித்து வரும் மாணவ மாணவியருக்கு எடுத்த உடனே மலைப்பை ஏற்படுத்தாமல் வழிகாட்டு பயிற்சிகளை நடத்த கல்லூரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடைய அரசு கல்லூரிகளில் 63 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதால் இன்று முதல் மூன்று நாட்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.