சென்னை ஜூலை, 2
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வருகிறது. இதையொட்டி அக்டோபர் 28, 29ம் தேதிக்கான ரயில் டிக்கெட்டுகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக முன்பதிவு நடைபெற்றது. முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. தொடர்ந்து இன்று அக்டோபர் 30ம் தேதிக்கான முன்பதிவு தொடங்குகிறது. இன்றைய கடைசி நாள் என்பதால் பயணிகள் அனைவரும் டிக்கெட் புக் செய்வதற்கு தயாராக உள்ளனர்.