ஷார்ஜா ஜூன், 23
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகால தொடக்கத்துடன் பாலைவன வெப்பம் உக்கிரமடைந்து வருவதால், அதற்கு தீர்வாக ஷார்ஜாவில் உள்ள மதுரை பிரியாணி உணவகம் புத்துணர்ச்சியூட்டும் வகையில் மோர் பந்தல் அமைத்து அனைவருக்கும் இலவசமாக தாகம் தீர்த்துவருகிறார்.
ஷார்ஜா அபுஷாகராவில் உள்ள மதுரை பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் பால முருகன், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தனது உணவகத்திற்குள் நுழைபவர்களுக்கும் அங்கு வரும் பாதசாரிகளுக்கும் இலவச மோர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த மோர்ப்பந்தல் கோடை முழுவதும் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்
இது பற்றி மதுரை பிரியாணி நிறுவனர் பாலமுருகன் கூறுகையில், “கோடைகால வெப்பம் கடுமையாக இருப்பதால், மேலும் வாடிக்கையாளர்களுக்கும் பாதசாரிகளுக்கும் குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் இருக்க ஏதாவது செய்ய விரும்புகிறேன்.மோர் ஒரு பாரம்பரிய, ஆரோக்கியமான பானமாகும், இது வியர்வையின் மூலம் இழந்த எலக்ட்ரோலைட்களை நிரப்புவதற்கு ஏற்றது. இது புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல் கோடை வெப்பத்தில் அடிக்கடி ஏற்படும் சோர்வை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.” ஆதலால் சுத்தமான முறையில் மோர் தயாரித்து கொடுப்பதாக கூறினார். இவரின் இந்த முயற்சி பலரின் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.