Spread the love

துபாய் ஜூன், 19

ஐக்கிய அரபு அமீரகத்தில் தியா கோல்ட் & டயமண்ட்ஸ் இரண்டு புதிய ஷோரூம்களை திறப்பதாக அறிவித்தது அதில் முதல் ஷோரூம் ஷார்ஜா சஃபாரி மாலில் சிறப்பாக திறக்கப்பட்டது.

அபுதாபியில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக ஹம்தான் தெருவில் விரைவில் தியா கோல்ட் & டயமண்ட்ஸ் ஷோரூம் திறக்கப்படுவதை எதிர்பார்க்கலாம். நிறுவனம் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் பல்வேறு விதமான மடல்களை குடியிருப்போர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கியுள்ளது. Diya Gold & Diamonds ஆனது நவீன நகை வடிவமைப்புகளை பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது, கடைகளில் KIDZI எனப்படும் குழந்தைகளுக்கான நகைகளுக்கான பிரத்யேகப் பிரிவு இடம்பெறும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நகைகளில் 0% செய்கூலி , வைர நகைகள் மீது 50% தள்ளுபடியுடன், GLORIA LIFE STYLE சேகரிப்பு திர்ஹம் 199 இல் தொடங்கும் பட்ஜெட்டுக்கு ஏற்ற நகைகள் வாங்குவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் சமீபத்திய வைர நகைகள் EVER DIAMONDS பிரிவிலும் தயாரிக்கப்படுகின்றன.

ஷார்ஜா ஷோரூம் திறப்பு விழா, மாண்புமிகு யாகூப் அலியின் முன்னிலையில் ஒரு மதிப்புமிக்க நிகழ்வாக நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஷபீக் பயங்காரா, நிர்வாக இயக்குனர் அப்துல் நாசர் பி.டி., ஜரீஷ் கே.கே., ஷமீர் பி.எம்., ஃபசல், அஸீஸ் டி.சி., அஸீஸ் கனிப்பாயில் மற்றும் எலைட் இஸ்மாயில் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இவ்விழா ஸ்ப்ரெட் ஸ்மைல்ஸ்’ ஈவென்ட்ஸ் மற்றும் ஊடக நிறுவனம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *