சென்னை ஆக, 28
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் புகழ். இவர் திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது புகழ், ‛மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் புகழ் கடந்த சில ஆண்டுகளாக கோவையை சேர்ந்த பென்சியா என்ற பெண்ணை காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புகழ் தனது காதலி பென்சியாவை வரும் செப்டம்பர் 5ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களது திருமண பத்திரிகையும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.