Spread the love

ஜூன், 11

செக்கு எண்ணெய் என்பது இயற்கை முறையை கொண்டு தயாரிக்கப்படுவது ஆகும். தேங்காய்களை நன்கு காயவைத்து பின்பு அதனை மரச்செக்கில் கொண்டு நல்ல கடைந்து எடுக்கப்பட்டதேயாகும்.

இவ்வாறு தயாரிக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு, தலைமுடி போன்றவற்றிக்கு பயன்படுத்துவது நல்லது. செக்கு எண்ணெய் சமையலுக்கு பயனப்டுத்துவதன் மூலம் அது உடலுக்கு சிறந்த நன்மையை தருகிறது.

உணவு செரிமானத்துக்கு நல்ல பயனை தருகிறது. பொதுவாக நம் சமையலுக்கு மற்ற எண்ணெய்களை பயன்படுத்தாமல் சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் உடல்நலத்துக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.

இதய நோய் உள்ளவர்களுக்கு தேங்காய் எண்ணெயில் சமைத்து கொடுப்பது நல்லது. வளரும் குழந்தைகளுக்கு கூட தேங்காய் எண்ணையில் சமைத்து கொடுப்பது நல்ல ஆரோக்கியத்தை தரும்.

செக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்திற்கு நல்ல மசாஜ் செய்து விட்டு பின்பு முகத்தை கழுவ நல்ல பொலிவை தரும். சிறிதாக அடிபட்ட இடங்களில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல பயனை கொடுக்கும்.

பொதுவாக அந்த காலங்களில் அடிபட்ட புண்களில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதுண்டு. முகப்பருக்கள் உள்ளவர்கள் இரவில் தூங்கசெல்வதற்கு முன்பு இந்த செக்கு எண்ணெய் கொண்டு முகத்தில் தேய்க்க ஓரிரு நாட்களில் அது சரியாகிவிடும்.

குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் கொண்டு நன்கு தேய்த்து குளிக்கவைக்க சருமம் மிருதுவாக இருக்கும். தேங்காய் எண்ணெய் ஈறுகளின் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பற்களை சுத்தமாக வைக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய் கொண்டு முதலில் வாய் கொப்பளித்த பின்பு பல் தேய்ப்பது பற்களை நல்ல வலுப்படுத்துவதோடு பற்களின் கறைகளை நீக்கி சுத்தமாக வைக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *