சென்னை ஜூன், 9
கிராம நிர்வாக அலுவலர் வன காவலர் பில் கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-4 எழுத்து தேர்வு இன்று நடைபெற உள்ளது. காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்த தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 6 ஆயிரம் காலி பணியிடங்களுக்காக சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த குரூப் 4 தேர்வின் முடிவுகள் 2025 ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.