ராமநாதபுரம் மே, 20
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டுவரும் இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தலைவரும் இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளரும், சென்னை உயர்நிதிமன்ற வழக்கறிஞருமான எம்எம்கே முஹைததீன் இபுராஹீம் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவராக பொன் பாஸ்கரன், பொருளாளராக பிரபு ஆகியோரும் மற்றும் ஏனைய நிர்வாகிகளும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேசன் செயலாளர் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் 32 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
தமிழகத்தில் பழம்பெருமை வாய்ந்த தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்திற்க்கு இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பொது செயலாளர் இவராவார் என்பதும் மேலும் இவர் இந்தியளவில் பள்ளிகளுக்கான சிறந்த தாளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்./அமீரக செய்திப் பிரிவு. U.A.E.