துபாய் மே, 11
ஐக்கிய அரபு அமீரக துபாய் ஹூத் மேத்தா பகுதியில் உள்ள பாகிஸ்தான் அரங்கில் துபாய் முத்தமிழ் சங்கம் ஈவென்ட்ஸ் நிறுவனம் சார்பில் முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா சேர்மன் இராமசந்திரன் தலைமையில் மற்றும் முத்தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள், ஷாஹுல் ஹமீது மணியரசு, பலா எம்சன், தங்கதுரை, பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா ஆகியோர் ஒருங்கிணைப்பில் குறும்பட இயக்குனர் ஆண்ட்ரியா மற்றும் தங்கதுரை ஆகியோர் தொகுத்து வழங்க மிக பிரமாண்டமான உலக தொழிலாளர் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஆடல் பாடல், நாட்டிய கலைஞர் பிரகல்யாவின் பாரத நாட்டியம், அமீரகத்தில் வசிக்கும் ஆசிய புக் சாதனை தமிழ் பாடகி மிருதுளா ரமேஷ்,
மற்றும் கோகுல் பிரசாத், நடன பிரபலம் சமியுக்ஸா, நாட்டுப்புற பாடகர் கரிசல்கலை முருகன் மற்றும் அமீரகத்தில் உள்ள கேகே நடன குழுவினரின் நடனம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இவ்விழாவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக, தமிழ் நாட்டிலிருந்து திரைப்பட விஜய் டிவி புகழ் நடிகை மைனா, பாடகி வர்ஷா, மேஜிக் நிபுணர் விக்கி கிரீஷ், இசையமைப்பாளர் மற்றும் பாடகர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக கேஆர்ஜி குரூப் நிறுவனர் கண்ணன் பாபு, ரேடியன்ட் ஸ்டார் நிறுவனர் ஆபித் ஜுனைத், புலம்பெயர் தமிழர் நலவாரியா உறுப்பினர் எஸ் எஸ் மீரான், பெருமாள் பூக்கடை நிறுவனர் பெருமாள், அமீரகத்தில் வசிக்கும் தொழிலதிபர்கள், கல்லிடைக்குறிச்சி முனைவர் முஹைதீன், மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா ஆசாத், சமூக சேவகி முனைவர் ஜாஸ்மீன், பகவதி ரவி, கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், . உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் மேலும் பார்வையாளர்களாக டிக்டாக் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக முத்தமிழ் சங்கத்தின் தலைவர் ஷா நன்றி கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் கொடுத்து மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E