கோவை மே, 10
தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மழை வேண்டி சிறப்பு பிராத்தனைகள் மேற்கொண்டனர். சென்னை வானிலை மையமும் கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது.
இந்நிலையைல் கடந்த சில தினங்களாக கோவை மாநகரில் உள்ள ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியில் இருந்தே கோவையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மழை பெய்தது. காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால், பீளமேடு, கணபதி, கவுண்டம்பாளையம், ஈச்சனாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் பரவலாக மழை பேய்தது. இதன் காரணாமாக உஷ்ணம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.