சென்னை மே, 6
நீட் நுழைவுத் தேர்வில் என்சிஆர்டி பாட புத்தகத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நேற்று நடந்த இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை 25 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் வினாத்தாள் எதிர்பார்த்து அளவுக்கு எளிதாக இல்லை என்றும் இயற்பியல் பாட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.