கீழக்கரை ஏப்ரல், 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலைத்தெரு ஓடக்கரை பள்ளிவாசல் செல்லும் சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை (சின்னக்கடை தெரு, பரப்பான் சம்மாட்டி தெரு, சாலை தெரு) கழிவுநீர் கால்வாய் வாருகால் நிறைந்து சாலைகளில் கழிவு நீர் ஆறு போல் ஓடுகிறது.
மேலும் இது வெள்ளிக்கிழமை மற்றும் பெருநாள் தினங்களில் அதிகமாக ஓடுகிறது இந்த அசுத்தமான கழிவு நீரால் பொதுமக்கள், வயதானவர்கள், சிறியவர்கள், சிறு குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கழிவுநீர் மேல் நடந்து செல்கிறார்கள், இதனால் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடும, நோய் தொற்றும் அபாயமும் ஏற்படும் இதனால் பொதுமக்கள் பெறும் அவதிக்கு உள்ளாவார்கள் என்பதை சுற்றிக்காட்டி கீழக்கரையில் பல்வேறு சமூக சேவை மற்றும் உதவிகள் செய்துவரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) மூலம் கழிவு நீர் வாருகாலை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க ஜகாத் கமிட்டி தலைவர் ஜாஹிர் ஹுசைன் தலைமையில் நிர்வாகிகள் முன்னிலையில் கோரிக்கை மனு நகராட்சி தலைமை அலுவலரிடம் அளிக்கப்பட்டது.
மேலும் மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி தலைமை அலுவலர் மனுவை ஆணையரிடம் அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.