கடலூர் ஆக, 27
தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்டு 25 ம்தேதி முதல் செப்டம்பர் 8 ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பார்வை இழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்ட மேலாளர் கேசவன், அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் நடராஜன், தலைமை கண் மருத்துவர் அசோக் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக அரசு மருத்துவமனையை சென்றடைந்தது. இதில் அரசு மருத்துவமனையின் செவிலியர்கள் மற்றும் செவிலிய பயிற்சி பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.