கீழக்கரை ஏப்ரல், 8
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500 பிளாட்டில் கஞ்சா விற்பனை கோஷ்டியினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500 பிளாட் கிளையில் பஜ்ர் தொழுகை முடிந்து வெளியில் வந்த கிளை செயலாளர் நஸிம்ஃபாய்ஸ், அப்துல் சலாம்,அர்ஷத் ஆகிய 3 பேரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாக கத்திகளால் குத்தி விட்டு தப்பிச் சென்று விட்டார்கள். சம்பந்தபட்ட குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது..
கீழக்கரையில் கஞ்சா போதை பொருள் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருவதும் இதனால் மாணவர்கள், வாலிபர்கள் பாதிக்கப்படுவதும் கவலையளிக்கிறது. கஞ்சாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்