சென்னை ஆக, 26
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை நடிகர் பாக்யராஜ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் அவர்,
எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் அதிமுக கட்சியை ஒன்றிணைந்து சிறப்பாக நடத்தியது குறித்து பெருமையாக பேசினார். மேலும் அதிமுகவிற்கு கண் திருஷ்டி ஏற்பட்டது போல் இந்த பிளவு வந்தது மீண்டும் அனைத்தும் சரியாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்தார். தேவைப்பட்டால், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இணைந்து செயல்பட அழைப்பு விடுப்பேன் என அவர் தெரிவித்தார்.