Spread the love

சென்னை ஆக, 26

திரு. வி. க. என அழைக்கப்பட்ட திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் சென்னை அடுத்த மதுரவாயல் அருகே உள்ள துண்டலம் கிராமத்தில் ஆகஸ்ட் 26, 1883 அன்று பிறந்தார். அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர்.

இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். அவரின் புகழைப் போற்றும் வகையில் தமிழக அரசின் சார்பில், இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் அவரது பிறந்த ஊரான துண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள திரு.வி.க.வின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்துக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் கணபதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *