Spread the love

மார்ச், 20

கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் இதனை ஜூஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது.

உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண் நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு கிர்ணிப்பழம் துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் கண்கள் பிரகாசிக்கும். ஒரு கப் கிர்ணி பழத்தில் உள்ள கலோரி 546, வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மூன்றும் இதில் அதிகமுண்டு.

கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும். கிர்ணி விதை பவுடரை தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

பசியின்மை, எடை குறைவு, மலச்சிக்கல், சிறுநீர் பாதைக் கோளாறு, அமிலத் தன்மை, அல்சர் ஆகிய அனைத்துக்கும் நல்லது. பசியின்மையை சரி செய்து, களைப்பை நீக்கி, வாதத்தையும் பித்தத்தையும் குறைக்கும்.வேறு எந்தப் பழமும் இதைப் போல வேகமாக உடல் சூட்டைத் தணிப்பதில்லை.

உடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிறபோது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே இருப்பதால் அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.

சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி. முகம் டல்லடிக்கும், அவர்கள் கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

கிர்ணிப் பழம் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோடின் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஊட்டச்சத்துகள் ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்க உதவியாக உள்ளன.

நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலை மிக விரைவாக பாதுகாத்து புகைப்பழக்கத்தினை நிறுத்தக் கூடிய அரிய குணம் கொண்ட பழம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *