சென்னை மார்ச், 13
தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு காவல்துறையினர் சில அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில் பள்ளிகள் அருகே உள்ள பெட்டிக்கடைகள், பேக்கரிகள் என அனைத்து கடைகளிலும் போலி பெயரிலான சாக்லேட் பிஸ்கட் போன்ற விற்கப்படுவது குறித்து ஆசிரியர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.