கோவை மார்ச், 12
கோவை காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முறையாக ஜெயலலிதாவிடம் முன்வைத்து முக்குலத்தோர் இடையே பெரும் செல்வாக்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.