புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தை குறிக்கும் பிறை நேற்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் காணப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.நேற்று மார்ச் 10 ஷஃபான் மாதத்தின் கடைசி நாளாக இருக்கும் என்றும், மேலும் ரமலான் மாதம் மார்ச் 11 திங்கள் (இன்று) தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இன்றைய மகரிஃப் தொழுகைக்குப் பிறகு பிறை பார்க்கும் குழு கூடி ரமலான் மாதத்திற்கான பிறையை பார்த்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சவுதியில் பிறை பார்க்கப்பட்டால் அமீரகம், குவைத், கத்தார், பக்ரைன் போன்ற நாடுகளும் சவுதியையே பின்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்தில் ரமலான் மாதத்தில் முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.