தர்மபுரி மார்ச், 11
புதிய நலத்திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று தர்மபுரி செல்ல உள்ளார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் செல்லும் அவர் இங்கிருந்து கார் மூலம் தர்மபுரி செல்கிறார். இந்த விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து 560 கோடி மதிப்பீட்டில் 75 புதிய திட்டங்களை அவர் தொடக்கி வைக்க உள்ளார்.